அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ட்விட்டர் நிறுவனம், புதிதாக ‘Safety Mode’ எனும் அம்சத்தை, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அறிமுகம் செய்து சோதனையை தொடங்கியது. இந்த சேப்டி மோட் அம்சத்தை ஆக்டிவ் செய்து வைத்திருக்கும் பயனர்களின் கணக்குகளில் யாரேனும் தவறான கருத்தகளையோ, ஆபாச கமெண்டுகளையே பதிவிட்டால், குறிப்பிட்ட அந்த கணக்கு 7 நாள்களுக்கு தானாக ப்ளாக் ஆகிவிடும்.
பின்னர் 7 நாள்கள் கழித்து தானாக கணக்கு UnBlock செய்யப்பட்டுவிடும். தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை குறிப்பிட்ட நபர் பதிவிட்டு வந்தால், அவரது கணக்கு முற்றிலுமாக முடக்கப்படும். இந்த அம்சம் தான் 2021ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் அப்டேட் மூலம் வழங்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நேரத்தில் இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த அம்சத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 50% விழுக்காடு ட்விட்டர் கணக்குகளுக்கு விரிவுப்படுத்தி இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்பின் இந்த அம்சம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More:
பழைய பணம்… நிறைய துட்டு – எப்படி சாத்தியம்?
ட்விட்டர் ‘Downward’ அம்சம்
தனிநபரைத் தாக்கி போடப்படும் பின்னூட்ட கருத்துகள், எதிர்மறை பின்னூட்ட கருத்துகள், எல்லாரும் தெரிந்து கொள்ளாதபடி தடுக்க, ட்விட்டர் ஒரு புதிய சேவையைத் தொடங்கி உள்ளது. தேவையற்ற பின்னூட்ட கருத்துகளை ‘Downward’ அம்சத்தின் கீழ் தேர்வு செய்துவிட்டால், அந்தத் தகவல்கள் மற்றவர்களுக்குத் தெரியாது. மேலும், இந்தத் தேர்வு செய்யப்பட்ட பின்னூட்டகருத்துகள், பயனாளிக்கு மட்டும் தெரியும்.
Read More:
இனி போன் தேவையில்ல – WhatsApp கொண்டு வரும் பெரிய அப்டேட்!
வெப் ட்விட்டர் தளத்திற்கு மட்டும் வழங்கப்படும் இந்த சேவை, விரைவில் அனைத்து தகவல் சாதனங்களுக்கு விரிபடுத்தப்படும் என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. தேவையற்ற கருத்துகளை முடக்க ட்விட்டர் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதேபோல், தற்போது 280 வார்த்தைகளாக உள்ள தகவல் பதிவின் அளவை, ‘Articles’ என்ற புதிய சேவையின் மூலம் விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பயனர்களின் பல நாள் குறையாக இருந்த இந்த சேவை குறைபாட்டிற்கு ட்விட்டர் முற்றுபுள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே அம்சம் முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Read More:
Instagram புதிய அப்டேட்: இனி Stories பிடித்திருந்தால் லைக்ஸுகளை பறக்கவிடலாம்!