வாஷிங்டன்:’ஹிந்துக்கள் புனிதமாக கருதும் ‘ஸ்வஸ்திக்’ சின்னத்தை, ‘நாஜி’க்களின் சின்னத்துடன் ஒப்பிட்டு பேசி அவமானப்படுத்த கூடாது’ என, வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த ஹிந்து அமைப்பு தெரிவித்துள்ளது.
‘கனடாவில் லாரி ஓட்டுனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்; தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர்’ என அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி ஓட்டுனர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோர் கூறுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், அரசு மீது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்த, நாஜிக்களின் ஸ்வஸ்திக்கொடியை ஏந்தி உள்ளனர்.’கனடாவில் ஸ்வஸ்திக்குக்கும், நாஜி கும்பலுக்கும் இடமில்லை’ என்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, கனடாவை சேர்ந்த ‘ஹிந்து பேக்ட்’ அமைப்பின் செயல் இயக்குனர் உத்சவ் சக்கரவர்த்தி கூறியதாவது:ஹிந்துக்களின் புனித சின்னம் ஸ்வஸ்திக். பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்களுக்கும் புனித சின்னமாக ஸ்வஸ்திக் உள்ளது. நாஜிக்களின் வெறுப்பு சின்னத்துடன், ஸ்வஸ்திக்கை ஒப்பிட்டு பேசி அவமானப்படுத்த கூடாது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement