திருவனந்தபுரம் :
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளது. ஷபானு வழக்கை தோல்வியடைய வைத்தவர்கள் தான் இதன் பின்னணியில் செயல்பட்டு வருகின்றனர்.முத்தலாக் தடையால் வேதனை படுபவர்கள் தான் ஹிஜாப் விவகாரத்தை பெரிதாக்குகின்றனர். இதுபோன்ற விவகாரங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தும். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என குரானில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
பள்ளிகள், கல்லூரிகள் மாணவ, மாணவிகளின் சீருடையை தீர்மானிக்க அதிகாரம் உண்டு. ஹிஜாப்பிற்காக போராடும் பெண்கள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தை சிறுபான்மை சமுதாயமாக ஏற்றுக்கொள்வது தவறு. ஒரு சமூகத்தை சிறுபான்மையினர் என பிரித்து ஓட்டு வங்கிக்கான தந்திரம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னரின் இந்த கருத்துக்கு கேரள உமன் இந்தியா மூவ்மென்ட் மாநில துணைத்தலைவர் மேரி ஆபிரகாம், முஸ்லிம்லீக் மாநில பொது செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான குஞ்ஞாலிக்குட்டியும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிக்கலாம்...‘ஒயின்’ பருகுவது கொரோனாவில் இருந்து காக்கும்: புதிய ஆய்வில் தகவல்