‘ஹிஜாப்’ முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது! கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், ஹிஜாப் குறித்து குரானில் ஏதும் சொல்லப்படவில்லை, ஒரு பிரிவினரின் பிற்போக்கானமனநிலையின் விளைவு, முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் விமர்சித்துள்ளார்.

பள்ளிகளில் அனைவரும் சமம் என்பதை உணர்த்திடவே சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை சரியாக கடைபிடிக்காத காரணத்தால், தற்போது மத ரீதியிலான பிரச்சினைகள் எழுந்துள்ளன.  கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு சென்றதால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள ஆளுநராக உள்ள இஸ்லாமிய சமூகத்தைச்சேர்ந்த  ஆரிஃப் முகமது கான், ஹிஜாப் பிரச்சினை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். ஹிஜாப் இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கமல்ல. ஹிஜாப் என்பது பெண்களின் உடை என குரானில் குறிப்பிடப்படவில்லை. ஹிஜாப் என்ற வார்த்தை 7 முறை மட்டுமே குரானில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஹிஜாப் விவகாரத்தில் இத்தகைய பிரச்சனை ஏற்பட ஒரு சிறு பிரிவினரின் பிற்போக்கு மனநிலையின் விளைவே காரணம்.

ஹிஜாப் என்பதும் புர்கா என்பதும் ஒன்றல்ல. இரண்டும் ஒரு வகையான உடையே தவிர இஸ்லாமிய விதியில் ஹிஜாப் அவசியமென எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், குரானில் ஐந்து கடமைகள் சொல்லப்பட்டுள்ளது. அதில் எங்குமே ஹிஜாப் இடம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

“ஹிஜாப் ஒரு பிரச்சினையே கிடையாது. ஆனால், இதை வைத்து, முஸ்லிம் பெண்களை பின்னுக்கு இழுக்கும் சதி வலை, ஒரு சிறு பிரிவினரின் பிற்போக்கு மனநிலைnய இந்த சர்ச்சைக்கு காரணம்.

இஸ்லாம் மதத்தின் நோக்கமே மனிதனுக்கு அறிவை நல்குவதுதான்.  அதைத்தான், இஸ்லாம் மதத்தின் புனித நூலான குரானில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரானில் கூறப்படும் ஐந்து கடமைகளில்  ஹிஜாப் எங்குமே இடம் பெறவில்லை.

நம்பிக்கை, ஐந்து முறை தொழுகை, ரம்ஜான் நோன்பு, ஈகை, ஹஜ் யாத்திரை ஆகியன் ஐந்து கடமைகளைத்தான் குரான் வலியுறுத்துகிறது.  ஆகையால் ஹிஜாப் இஸ்லாம் மத நம்பிக்கையின் அடிப்படை அம்சம் அல்ல அதனால் அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 அளிக்கும் உரிமையின் கீழ் வராது என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் விவகாரம் உருவாகியுள்ளது அறியாமையின் விளைவு. குரானின் முதல் வார்த்தை வாசிப்பு. இறைவனின் நாமத்தை மட்டும் வாசிக்குமாறு குரான் சொல்லவில்லை. விலங்குகள், நட்சத்திரங்கள், விண்வெளி ஆகியனவற்றைப் பற்றி சிந்திக்கச் சொல்கிறது குரான். குரானில், 700க்கும் மேற்பட்ட வார்த்தைகள் ஞானத்தைத் தொடர்புடையதாக உள்ளன ஞானத்தைத் தேடி சீனாவுக்குக் கூட செல்லலாம் எனக் கூறுகிறது குரான்.

முத்தலாக் தடை செய்யப்பட்ட பின்னர், முஸ்லிம் பெண்கள் சுதந்திரமாக உணர்கிறார்கள். அவருக்கு விடுதலை உணர்வு கிட்டியுள்ளது. அவர்கள் பெரிய வேலைகளில் அமர்கிறார்கள்” என்று கூறியதுடன், ஒரு சிறு பிரிவினரின் பிற்போக்கான மனநிலையின் விளைவுதான் தற்போது கர்நாடகாவில் எழுந்துள்ள ஹிஜாப் பிரச்சினை.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள முதல்வர் ஆரிப்கான் கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆரிப்கான்,  மோடி தலைமையிலான பாஜக அரசால், கேரள கவர்னராக நியமிக்கப்பட்டவர். இதனால், அவரது கருத்து, பாஜக அரசுக்கு ஆதரவாக இருப்பதாக மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.