Tamilnadu News Update : தஞ்சை மாணவி மரணமடைந்த வழக்கில் நீதி கேட்டு முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய 32 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் 12 பேர் தவறாக முகவரி கொடுத்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி பகுதியில் உள்ள கிறிஸ்துவ பள்ளியில் படித்து வந்த லாண்யா என்ற மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்டாயம் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டாத தகவல் வெளியானதை தொடர்ந்து விடுதியின் வார்டன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவினர் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை முருகானந்தம் சிபிஐ விசாரணை வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அணியான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சில சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உடனாடியாக அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை பெருநகர் 18-வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்த நிதி திரிப்பாதி உட்பட 32 பேரை வரும் பிப்ரவரி 28-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடாந்து 3 சிறார்களை தவிர மீதமுள்ள 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 12 பேர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், கைது செய்யப்பட்ட 32 பேரிடமும் தந்தை பெயர் மற்றும் வீட்டு முகவரி கேட்டு காவல்துறையினர் எழுதி வைத்துள்ளர். இதில் சோதனை செய்தபோது 12 பேர் தந்தை பெயர் மற்றும் வீட்டு முகவரி தவறாக அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“