LIC பங்கு விற்பனை கன்பார்ம் ஆகிடுச்சு.. அடுத்தது IDBI வங்கியா.. மோடி அரசின் அடுத்த திட்டம் என்ன?

எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையானது இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக ஐடிபிஐ வங்கியின் (IDBI bank) பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்த கலந்துரையாடல் விர்சுவல் மூலமாக அடுத்த வாரம் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விர்சுவல் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

எல்ஐசி IPO.. பங்கு விலை ரூ.1700 – 3500-க்குள் இருக்கலாம்.. ரெடியாகிகோங்க..!

யாரிடம் எவ்வளவு பங்கு?

யாரிடம் எவ்வளவு பங்கு?

ஐடிபிஐ வங்கியிடம் கிட்டதட்ட 95% பங்குகள் உள்ளது. இதில் எல்ஐசி மற்றும் அரசின் வசம் உள்ள பங்குகளும் அடங்கும். இந்த முழு பங்குகளும் விற்பனை செய்யப்படலாமோ என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அரசின் வசம் 45.5% பங்கினையும், எல்ஐசியின் வசம் 49.24% பங்கினையும், புரோமோட்டர் அல்லாத பங்குதாரர்கள் வசம் 5.29% பங்கினையும் கொண்டுள்ளனர்.

திறந்த வெளி சந்தை மூலம் ஏலம்

திறந்த வெளி சந்தை மூலம் ஏலம்

ஐடிபிஐ வங்கியின் இந்த பங்கு விற்பனையானது திறந்த வெளி சந்தை மூலம் ஏலமிடப்படலாம் என முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று செபிக்கு பங்கு வெளியீட்டிற்கான வரைவினை அனுப்பியுள்ள எல் ஐ சி-யின் பங்கு வெளியீடு குறித்தான அறிவிப்பானது, விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடிபிஐ செயல்பாடுகள்
 

ஐடிபிஐ செயல்பாடுகள்

ஐடிபிஐ வங்கிக்கு மார்ச் 2021 நிலவரப்படி 1884 கிளைகளும், 3388 ஏடிஎம்களும், சந்தை மதிப்பு 50,751 கோடி ரூபாயாகவும், காசா விகிதம் 50.45% ஆகவும், மொத்த டெபாசிட் விகிதம் 2.30 லட்சம் கோடி ரூபாயாகவும், இதே அட்வான்ஸ் 1.28 லட்சம் கோடி ரூபாயாகவும், நிகர வாராக்கடன் 1.97% ஆகவும் உள்ளது.

நிகரலாபம்

நிகரலாபம்

இதம் நிகர வட்டி வருவாய் 2021ம் நிதி ஆண்டில் 8517 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 6977 கோடி ரூபாயாக இருந்தது. இதே நிகர வட்டி மார்ஜின் 3.5% ஆகவும், வரிக்கு பிந்தைய லாபம் 2021ம் நிதியாண்டில் 1359 கோடி ரூபாயாகவும் இருந்தது. இது கடந்த 2020ம் நிதியாண்டில் 12,887 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

govt may start to launch IDBI bank sale process next week

govt may start to launch IDBI bank sale process next week/LIC பங்கு விற்பனை கன்பார்ம் ஆகிடுச்சு.. அடுத்தது IDBI வங்கியா.. மோடி அரசின் அடுத்த திட்டம் என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.