Russia-Ukraine crisis: ரஷ்யா படைகளை வாபஸ் பெறவில்லை என அமெரிக்கா குற்றசாட்டு

ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து பதற்றம் இருந்து வரும் சூழ்நிலையில், உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது தான் உள்ளது. இரு நாடுகளும் இடையில் பதற்றம் நிலவுகிறது. 

உக்ரைன் – ரஷ்ய எல்லைப்பகுதியில் ரஷ்யாவின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படைகளை கடந்த ஒரு மாத காலமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை நிலவியது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதாக கனடா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்த ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அது தொடர்பான வீடியோவையும் ரஷ்யா பகிர்ந்து கொண்டது. 

நேற்று காலை உக்ரைனின் கிரிமியா பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டது. உக்ரைன் மீது நிச்சயமாக போர் புரியும் எண்ணம் ஏதுமில்லை என்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவே விரும்புவதாகவும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினும் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

நேட்டோ கூட்டமைப்பில் இணைய சோவியத் நாடான உக்ரைன் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ரஷ்யா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் பக்கம் நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை என்பதோடு கூடுதல் படைகள் குவிக்கப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில் அதிக அளவிலான உக்ரைன் எல்லையை நோக்கி ரஷ்ய படைகள் பயணிக்கின்றன. அங்கிருந்து படைகள் திரும்ப பெறப்படவில்லை என்கிறார்.ரஷ்யாவுடன் நேரடியாக மோதும் சூழ்நிலையை அமெரிக்கா விரும்பவில்லை என்றாலும், உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அதேபோன்று, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் கூறுகையில் எல்லை நோக்கி கூடுதல் படைகள் வந்து கொண்டிருக்கின்ற, இதுவரை ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை. ரஷ்ய படைகளை திரும்ப பெறவில்லை என்ற உண்மையை செயற்கைகோள் படங்கள் மூலம் எங்களால் நிரூபிக்க முடியும் என்றார். ரஷ்ய படைகள் திரும்ப பெறப்பட்டதால் போர் பதற்றம் தணிந்ததாக உலகம் நிமத்தி பெருமூச்சி விட்ட நிலையில், தற்போது அமெரிக்கா நேட்டோ நாடுகள் கூறுவது வேறு விதமாக உள்ளது. 

ரஷ்யா – உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து கொஞ்சம் சிறிய படைகள்  வாபஸ் பெறப்பட்டு பதட்டமும் குறையலாம் என்றாலும், ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் ரஷ்ய ராணுவம் முற்றிலுமாக உக்ரைன் எல்லையிலிருந்து வெளியேற வாய்ப்பே இல்லை என உலக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.