அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேரில், 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் 70 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் என்று சொல்லக்கூடிய ஐ.எம்.தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்து, கடந்த 8-ந் தேதி தீர்ப்பு வெளியானது.
49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற 28 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், எஞ்சிய 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.