அதிகரிக்கப்பட்டது பணத்தொகை! சரியான தகவலுக்கு 25 இலட்சம் ரூபா: பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு



ரம்புக்கன, கொட்டவெஹெர ரஜமகா விகாரையில் கலைப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நம்பகத்தன்மையான தகவலை வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என தற்போது பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 859 1772, 07 18591924, 011 2422176 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு தகவலை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு

வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என விகாரையின் பிரதமகுரு புஸ்ஸல்லா ஆரியவன்ச தேரர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார். 

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தங்கம் மற்றும் வெண்கல கலசங்கள், ஊதா மற்றும் வெள்ளை படிக பெட்டிகள் இரண்டு, நினைவுச்சின்னங்களைக் கொண்ட ஒரு பளிங்கு பெட்டி, தங்க சுவடுகள் ஐந்து, பெட்டியிலுள்ள ஒரு கலசம் ஆகியவை 11ஆம் திகதி இரவு திருடப்பட்டுள்ளன.

இவை திருடப்பட்டு இன்றோடு ஐந்து நாட்கள் கடந்துள்ளன. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இது தொடர்பாக எந்தவித தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. இவை அனைத்தும் விலைமதிப்பு மிக்கவையாகும். 2300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சொத்துக்களாகும்.

இது தொடர்பில் யாராவது தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பரிசோதகர் ஜயசேகரவை 071 5894924 அல்லது 070 2542162 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.

அல்லது எனது தொலை பேசி இலக்கத்துக்கும் 071 6920275 தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.