மத்திய அரசு அமைத்துள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்கான சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு மாநில அளவில் அணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உரிமையாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு குறித்த புள்ளிவிவரங்களை வகுக்க சட்டம் வகை செய்கிறது.
அதன்படி அமைக்கப்பட்ட ஆணையம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம் அரசிதழில் வியாழனன்று வெளியிட்டது. அணைகளின் பாதுகாப்பு, பேரழிவு தடுப்பு, மாநிலங்கள் இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றை இனி இந்த ஆணையம் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM