இளையராஜாவின் இசையை பயன்படுத்த தடை… காப்பிரைட் விவகாரத்தில் ஹைகோர்ட் உத்தரவு!

ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது பிரபல இசையமைப்பாளர்
இளையராஜா
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல தொகுப்பாளினி… புகழ்ந்து தள்ளும் தளபதியன்ஸ்!

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமத், கடந்த 2019 ஆண்டு பிறப்பித்த உத்தரவில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என கூறி இளையராஜா மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தார்.

இப்படி சோம்பல் முறிச்சா எப்படி… பூனம் பஜ்வாவின் போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்!

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி எம்.துரைசாமி நீதிபதி தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி… எல்லை மீறும் பிரபல நடிகை!

அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் வாதிட்டார். தனி நீதிபதி தனது உத்தரவில் காப்புரிமை சட்டத்தின் பிரிவு 14ல் “பதிப்புரிமை” என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார் என்றும், இசைப் பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது “எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு” பிரத்தியேக உரிமையாகும் என்று வாதிட்டார்.

சமாதானமா? தனுஷ் சிபாரிசை ஏற்ற நடிகர் ரஜினிகாந்த்!

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் மனு குறித்து எகோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் ஆகிய இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேடையில் அரசியல் பேசிய இயக்குனர் அமீர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.