எரிபொருள் தட்டுப்பாட்டினால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதனால் தேசிய ரீதியான மொத்த மின் உற்பத்தியில் 163 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தில் நெப்தா எனப்படும் எரிபொருளைக் கொண்டு மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.