கடந்த காதலர் தினத்தன்று வெளியான விஜய்யின் ‘அரபிக்குத்து’ பாடல் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. இந்த ஒரே பாட்டின் மூலம் இளசுகளின் மனசில் நியூ கிரேஸ் ஆக இடம்பிடித்துள்ளார்
ஜோனிதா காந்தி
. இந்நிலையில் இவர் குறித்த முக்கியமான தகவல் ஒன்று இணையம் முழுவதும் பரவி வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘
பீஸ்ட்
‘ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.
பீஸ்ட்’ படத்தி பர்ஸ்ட் சிங்கிளான “ஹலமித்தி ஹபிபோ” பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. தளபதி விஜய்யின் துள்ளலான நடனமும் அனிருத்தின் அசத்தலான இசையும் இணைந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல் இதுவரை யூட்யூப்பில் 41 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 50 மில்லியன் பார்வையாளர்களை தொட உள்ளது.
அஜித் ரசிகர்களை எச்சரிக்கும் சிம்பு பட இயக்குனர்: என்ன இப்படி சொல்லிட்டாரு..!
“ஹலமித்தி ஹபிபோ” பாடலில் ஜோனிதா காந்தி கொடுத்துள்ள படு அசத்தாலான ரியாக்ஷன்களை பார்த்த ரசிகர்கள், ஹீரோயின் பூஜா ஹெக்டாவை தூக்கி சாப்பிட்டுட்டார். நீங்க ஹீரோயினா நடிக்க டிரை பண்லாமே என இணையத்தில் ஏகத்துக்கும் புகழ்ந்து வந்தனர். இவர் ஏற்கனவே அனிருத்துடன் இணைந்து “செல்லம்மா செல்லம்மா“ பாடலையும் பாடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகவுள்ள “Walking talking strawberry ice cream“ படத்தில் ஜோனிதா காந்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் இரண்டாவது ஹீரோவாக வந்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்த விநாயக் என்பவர் இந்தப்படத்தை இயக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thalapathy