சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ரஜினி, தங்க செயின் பரிசாக அளித்தார். அத்துடன் சிவாவுடன் 3 மணிநேரம் கலந்துரையாடிவிட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் – தனுஷும் பிரியவுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். மகளின் விவாகரத்து முடிவை ரஜினி சிறிதும் விரும்பவில்லையாம். குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ஆர்டர் போட்டாதாகவும் தகவல்கள் வெளியானது. இதுமட்டுமல்லாமல் குடும்ப நண்பர்கள் மூலமாக தனுஷ், ஐஸ்வர்யா இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும் ரஜினி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஒரே பாட்டில் ஓவர் நைட்டில் பேமஸ்: ஜோனிதா காந்திக்கு அடித்த ஜாக்பாட்..!
குடும்ப பிரச்சனையால் மன வேதனையில் இருக்கும் ரஜினி சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஜினியின் ‘
தலைவர் 169
‘ பட அப்டேட் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.
இந்நிலையில் ரஜினியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே ஸ்டைலிஸ், சிரிப்புடன் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார் ரஜினி. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதே மாதிரி எப்பவும் சிரிச்சுட்டே இருங்க தலைவா. எங்களுக்கு அது போதும் என கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.
யுவன் ஷங்கர் ராஜாவா இப்படி பண்ணாரு_ நம்பவே முடியலையே!