குளிரில் நடுங்கிய மக்கள் கதகதப்பில் கிம் ஜங் உன்| Dinamalar

சியோல்:வட கொரியாவில், மறைந்த அதிபர் கிம் ஜங் இல்லின் 80வது பிறந்த நாள் விழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் குளிரில் நடுங்கியபடி இருக்க, அதிபர் கிம் ஜங் உன் மட்டும், உடலை கதகதப்பாக வைக்கும் வெப்ப சாதன வசதியில், ரகசியமாக அமர்ந்து பேசியது அம்பலமாகியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவின் சம்ஜியோன் நகரில், முன்னாள் அதிபர் கிம் ஜங் இல்லின் 80வது பிறந்த நாள் விழா நடந்தது. இதில், கிம் ஜங் இல் மகனும், தற்போதைய அதிபருமான கிம் ஜங் உன், தன் தங்கை மற்றும் அரசு அதிகாரிகளுடன் பங்கேற்றார். வட கொரியாவில் தற்போது, ‘மைனஸ் 15’ டிகிரி குளிர் நிலவுகிறது. இந்நிலையிலும், கிம் ஜங் உன் பேச்சை கேட்க, ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அவர்கள், கடும் குளிரில் தொப்பி, கையுறை அணியாமல், நடுங்கியபடி கிம் ஜங் உன் பேச்சை கேட்டனர். ஆனால், கிம் ஜங் உன் உள்ளிட்டோர் இருந்த மேடையில், தரை விரிப்புக்கு கீழே வயர்கள் பொருத்தப்பட்டு, வெப்ப சாதனம் இயங்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் குளிரில் நடுங்கியபடி இருக்க, அதிபர் கிம் ஜங் உன் உள்ளிட்டோர், வெப்ப சாதனத்தின் உதவியால் உடலை கதகதப்பாக வைத்திருந்ததற்கு, உலகளவில் கண்டனக் குரல்கள் எழுந்து உள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.