சிட்னி:கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவர், சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில், மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தலங்களுள், கடற்கரையும் ஒன்று. இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், கடலில் குளித்து மகிழ்வர்.சமீபத்தில், சிட்னிக்கு அருகில் உள்ள லிட்டில் பே என்ற கடற்கரையில், கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பான, ‘வீடியோ’ சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.கடந்த, 1963க்குப் பின், சிட்னி கடற்கரையில், இப்போது தான் சுறா மீன் தாக்குதல் நடந்துள்ளது. இதையடுத்து, சிட்னில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், சுறா மீனை பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சிட்னி:கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவர், சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில், மிகவும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.