திமுக அரசை கண்டித்து தர்ணா… கோவையில் அதிமுக எம்எல்ஏக்கள் கைது

Tamilnadu ADMK Protest In Covai District : தமிழகத்தில நகர்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் முன்னாள் அமைச்சர் என்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 19) ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுககான கடந்த ஒரு மாத காலமாக அரசியலட கட்சி தலைவர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி முதல்வர் ஸ்டாலின் வரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக நடைபெற்று வந்த இந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததது. இதனைத் தொடர்ந்து நாளை தமிழகம முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று கூறி கோவையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில அதிமுக தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகர காவல் ஆணையர் ஜெயச்சந்திரன் பேச்சுவார்த்தயில் ஈடுபட்டார். அப்போது கோவை மேட்டு்பபாளையம் எம்எல்ஏ செல்வராஜ் காவல்துறையினரிம் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போராட்டம் தொடர்ந்து வருகிறது திமுக அரசை கண்டித்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள வெளி மாவட்டதிமுகவினர் வெளியேற வேண்டும் என்றும், கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களிடம், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது. திமுக, காவல்துறை மற்றும் மாநகர ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், 3 மணி நேரமாக போராட்டத்தை கைவிட மறுத்த அதிமுகவினர் தலையில் படுத்துக்கொண்டு போராட்டத்தை கைவிட மறுத்ததால் காவல்துயைினர் மற்றும் எம்எல்ஏக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.