ஏஆர் முருகதாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அதோடு தயாரிப்பாளராகவும் வலம் வரும் ஏஆர் முருகதாஸ் பல இளம் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி… எல்லை மீறும் பிரபல நடிகை!
அந்த வகையில் தனது உதவி இயக்குநரான
பொன்குமார்
இயக்கும் படத்தை ஏஆர் முருகதாஸ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர்
கவுதம் கார்த்திக்
ஹீரோவாக நடிக்கிறார். பொன்குமார் கூறிய கதை பிடித்ததால் உடனடியாக தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஏஆர் முருகதாஸ்.
பழம் பெரும் நடிகையுடன் லஞ்ச் சாப்பிட்ட ‘ராஜமாதா’… வைரலாகும் போட்டோ!
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் புதுமுக நடிகை ஒருவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என தெரிகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
சமாதானமா? தனுஷ் சிபாரிசை ஏற்ற நடிகர் ரஜினிகாந்த்!
ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் கவுதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படத்தை ஏஆர் முருகதாஸின் அசோசியேட் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். தற்போது ஏஆர் முருகதாஸ் அனிமேஷன படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் அரசியல் பேசிய இயக்குனர் அமீர்