வாகனங்கள் ஓட்டும்போது ஓட்டுனர்கள் தூங்கிவிடுவதால் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. இதனால் பலர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்காக வாகன ஓட்டுனர்களை தூங்கவிடாமல் எச்சரிக்கும் வகையில் சாதனம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டுனர் கௌரவ் சவ்வாலாகே என்பவர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சமீபத்தில் தூக்கம் காரணமாக இரவில் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானேன். அதனால் வாகனம் ஓட்டும்போது யாராவது தூங்கினால் எச்சரிக்கை அளிக்கும் வகையில் கருவி ஒன்றை உருவாக்க நினைத்தேன்.
அதன்படி, அதிர்வுகளுடன் கூடிய எச்சரிக்கை கருவியை கண்டுபிடித்தேன். இ்நத கருவி காதின் பின்புறத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும்போது டிரைவரின் தலை ஸ்டியரீங்கை நோக்கி 30 டிகிரி கோணத்தில் சாய்ந்தால் கருவியில் இருந்து அலாரம் அடித்து ஓட்டுனரை எழுப்பிவிடும். இதன் மூலம் விபத்தை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலன் மஸ்க் – சர்ச்சையால் டுவிட்டை நீக்கினார்