சென்னை: நடப்பாண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:
“நடப்பாண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டி 100 மாணவர்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ராமநாதபுரத்தில் 150 மாணவர்கள் வரை தங்கி கல்வி பயில போதி இட வசதி உள்ளதால், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அங்கு தங்கி கல்வி பயில தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது” என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணி நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது