பணிக்காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகளில் சோதனை <!– பணிக்காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடு… –>

தருமபுரி அருகே ஓரிரு மாதங்களில் ஓய்வு பெறவுள்ள 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏமக்குட்டியூரில் மதலைமுத்து, அரூரில் ஆனந்தன், ஏ.பள்ளிப்பட்டியில் ஜெயராமன் என மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வீடுகளில் காலை 8 மணி தொடங்கி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

பணிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. 3 பேருமே வரும் மே மாதத்தில் ஓய்வு பெற உள்ளனர் என்பதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.