புதிய சமையல் நிகழ்ச்சி குக்கிங் கில்லாடிஸ்: 20ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
விஜய் டி.வியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அதே மாதிரியான ஜாலியான சமையல் நிகழ்ச்சியை மற்ற சேனல்களும் ஒளிபரப்ப தொடங்கி விட்டது. முன்னணி சேனல் ஒன்று பெரிய சினிமா நடிகரை வைத்து சர்வேதச கான்செப்டில் நடத்திய சமையல் நிகழ்ச்சி பெரிய தோல்வியை தழுவியது. விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொடங்கி விட்டது.
இந்த நிலையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சி குக்கிங் கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சி வருகிற 20ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இதனை காயத்ரி யுவராஜ் தொகுத்து வழங்குகிறார். இவர் தென்றல், மெல்ல திறந்தது கதவு, அரண்மனைக்கிளி ஆகிய சீரியல்களில் நடித்தவர்.