11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்ற காரணத்தால் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வடமதுரை பகுதியில் பாண்டி என்பவர் கூலித் தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவியை அந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். அவருடன், குடும்பம் நடத்தி வந்த நிலையில் பெற்றோர்கள் தங்களது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட நிலையில் பாண்டி காவல்துறையால் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.