கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும், முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கிடையில், மேற்கு வங்காள ஆளுநர் பதவியில் இருந்து ஜக்தீப் தங்கரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கறிஞர் ராமபிரசாத் சர்கார் தாக்கல் செய்த ரிட் மனுவில், ஆளுநர் ஜக்தீப் தங்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார். அவர் பா.ஜ.க.வின் குரலாக பேசி வருகிறார். இதனால் ஜக்தீப் தங்கரை மேற்குவங்காள ஆளுநர் பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த ரிட் மனுவை நேற்று விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தங்கரை நீக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதையும் படியுங்கள்…முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை