கொல்கத்தா:
ரஞ்சிக் கோப்பை ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
கொல்கத்தாவில் நடந்து வரும் போட்டியில் பீகார், மிசோரம் அணிகள் மோதின. டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பீகார் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மங்கல் மாரோர் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ரிஷாவ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய லக்கன் ராஜா 25 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய பாபுல் குமார், சகிபுல் கனி ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க மிசோரம் வீரர்கள் அரும்பாடுபட்டனர்.
அறிமுக வீரராக களமிறங்கிய சகிபுல் கான் அபாரமாக ஆடி முச்சதம் விளாசி உலக சாதனை படைத்தார்.
சகிபுல் கனி 341 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சச்சின் குமார் டக் அவுட்டானார்.
இறுதியில் பீகார் அணி 5 விக்கெட் இழப்புக்கு 686 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரட்டை சதமடித்த பாபுல் குமார் 229 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் பிபின் சவுரப் 50 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய மிசோரம் இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்…புரோ கபடி லீக் போட்டி: பாட்னா, டெல்லி, உ.பி.யோதா பிளேஆப் சுற்றுக்கு தகுதி