பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும்
ஷங்கர்
மெகா பட்ஜெட் படங்களுக்கு பெயர் போனவர். ஜென்டில் மேன் படத்தில் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், ரஜினி கமல் என உச்ச நடிகர்களை இயக்கியுள்ளார். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
13 வருடங்கள் பேசாமல் இருந்த இளையராஜா கங்கை அமரன்.. இதுதான் காரணம்!
தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை இயக்கி வருகிறார். இந்தப் படம் இன்னும் பெயர் வைக்கப்படாததால்
ஆர்சி 15
என குறிப்பிடப்பட்டு வருகிறது. ஆக்ஷன் படமான இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சிகாக இயக்குநர் ஷங்கர் 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BB Ultimate: உன்னையெல்லாம் உள்ளே விட்டதே தப்பு… ஜூலியை கதறவிட்ட வனிதா!
மேலும் இப்படத்திற்காக இயக்குநர் ஷங்கர் அதிகம் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தனது ஸ்ரீவெங்கடேஷ்வரா புரடெக்ஷன்ஸ் மூலம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் அந்நிறுவனத்தின் 50வது படம் ஆகும்.
இப்படி சோம்பல் முறிச்சா எப்படி… பூனம் பஜ்வாவின் போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்!
அடுத்த ஆண்டு இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். பேன் இந்திய படமான இப்படத்திற்கு தமிழில் பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கைக்கு உகந்த படம் கடைசி விவசாயி; பாராட்டிய மிஷ்கின்