உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் உலக நாடுகள் அமைதியடைய வேண்டி நூதன முறையில் மொல்டோவா நாட்டு விமானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனி விமானம் மூலம் வானில் வட்டமடித்த விமானி ரிலாக்ஸ் என்ற வார்த்தை வடிவில் ஆகாயத்தில் பயணித்துள்ளார். போர் பதற்றத்தில் இருந்து மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விடுதலை பெற்று நிம்மதியடையக் கோரிக்கை விடுத்துள்ளார்.
வானில் ரிலாக்ஸ் என்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவப் பாதையில் விமானி சென்ற வீடியோ ரேடார் கண்காணிப்பு இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.