நடிகர்
சூர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான சூரரைப்போற்று மற்றும்
ஜெய் பீம்
ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது
பாண்டிராஜ்
இயக்கத்தில்
எதற்கும் துணிந்தவன்
படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும் வினய், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
என்னது காந்தி குறுக்க வந்துட்டாரா..அப்போ யாரதான்டா சுடபோனிங்க ? சர்ச்சையில் சிக்கிய கார்த்திக் சுப்புராஜ்..!
சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து வெளியான போஸ்டர் மற்றும் பாடல்கள் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படம் திரையில் வெளியாவதால் இப்படத்தை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் ஓடும் இந்த டீசரில் சூர்யா செம மாஸாக இருக்கின்றனர். அவருக்கு சவால் விடும் வில்லனாக வினய் தோன்றுகிறார். பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும் என்று இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சூர்யா இதுபோன்று கமர்ஷியல் படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகியுள்ளதால் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர் ரசிகர்கள். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வேல், சிங்கம் படங்களைப்போன்று இப்படமும் ரசிகர்களுக்கு கமர்ஷியல் விருந்து படைக்கும் என்பது ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரிய ஹீரோ , சின்ன ஹீரோ என்றெல்லாம் இல்லை , நல்ல படங்கள் பண்ணுவேன் – நடிகை திவ்யபாரதி!