உலக நாடுகள் பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்படும் உயரிய விருதுகளில் வெளிநாட்டவர்களுக்கு அளிப்பது வழக்கம், அந்த வகையில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு இந்த அண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலகின் மிகப்பெரிய நன்கொடையாளராக இருக்கும் பில் கேட்ஸ்-க்கு அந்நாட்டின் 2வது உயரிய விருதான ஹிலால்-இ-பாகிஸ்தான் என்னும் விருதை அளித்துள்ளது.
இந்த உயரிய விருது எதற்காக அளிக்கப்பட்டது என்பது தான் தற்போது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார மற்றும் வர்த்தகம் நீண்ட காலமாக மோசமாக இருப்பதைப் போலவே அந்நாட்டில் சுகாதாரம் மற்றும் ஹெல்த் கேர் சேவைகளும் மோசமாகவே இருந்தது. குறிப்பாக உலகில் போலியோ மூலம் அதிகம் பதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பாகிஸ்தான் இருந்தது.
போலியோ
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் போலியோ-வை ஒழிக்கப் பெரிய அளவில் பில் கேட்ஸ் மற்றும் அவருடை தொண்டு நிறுவனம் உதவிய காரணத்தை இதைப் பாராட்டும் வகையில் இம்ரான் கான் தலைமையிலான பாரிஸ்தான் அரசு, அந்நாட்டின் 2வது உயரியை விருதான ஹிலால்-இ-பாகிஸ்தான் விருதை வழங்கி கௌரவித்தது உள்ளது.
பில் கேட்ஸ்
இந்நிலையில் பில் கேட்ஸ் ஒரு நாள் பயணமாகப் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் பில் கேட்ஸ் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் தேசிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் (NCOC) பார்வையிட்டார்.
பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானுக்கு முதல் முறையாகப் பில் கேட்ஸ் வந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது. போலியோ ஒழிப்பு மற்றும் கோவிட் கட்டுப்பாடுகள் குறித்துப் பாகிஸ்தான் நாட்டின் முயற்சிகளைப் பிரதமர் இம்ரான் கான் அவருக்கு விளக்கியுள்ளார்.
முக்கிய அதிகாரிகள் சந்திப்பு
இதைத் தொடர்ந்து பிரதமரின் வீட்டில் பில் கேட்ஸ்-க்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்தப் பயணத்தில் பில் கேட்ஸ் பல அரசு உயர் அதிகாரிகளைச் சந்தித்து உள்ளார், குறிப்பாக NCOC அமைப்பைச் சேர்ந்த பல அதிகாரிகளைச் சந்தித்து உள்ளார்.
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேன்ஷன்
பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா இணைந்து உருவாக்கிய பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேன்ஷன் உலகளவில் போலியோ-வை ஒழிக்க GAVI உடன் இணைந்து மிகப்பெரிய உதவிகளைச் செய்துள்ளது. இந்தியாவிலும் பல திட்டங்களையும் இக்கூட்டணி செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Pakistan Govt honors Bill Gates with 2nd highest award Hilal-e-Pakistan
Pakistan Govt honors Bill Gates with 2nd highest award Hilal-e-Pakistan’ஹிலால்-இ-பாகிஸ்தான்’ பில் கேட்ஸ்-க்கு உயரிய விருதை கொடுத்த பாகிஸ்தான்.. எதற்காகத் தெரியுமா..?!