1,100 சொகுசு கார்கள் நாசமாயின| Dinamalar

பனாமா: அட்லாண்டிக் கடல்பகுதியில் மிகப்பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகின நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மன் துறைமுகத்திலிருந்து கடந்த பிப்.10-ம் தேதி பெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல், 22 மாலுமிகளுடன் அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கப்பலில் வோல்ஸ்வோகன், லம்போகிரினி, போர்ஷே, ஆடி உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு ரக கார்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அட்லாண்டிக் கடல் பகுதியில் அசோர்ஸ் தீவு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 1,100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் தீயில் கருகி நாசமாயின. தகவலறிந்த மீட்புபடையினர் 22 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். எனினும் கப்பல் தொடர்ந்து தீப்பிடித்து வருவதால், மேலும் சொகுசு ரக கார்கள் தீயில் நாசமாகும் என கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.