பீஜிங்:சீனாவை சேர்ந்த, 54 ‘மொபைல் போன்’ செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து, சீனா கவலை தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்து வருகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், ‘டிக்டாக்’ உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட சீன மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், மேலும் 54 செயலிகளுக்கு, சமீபத்தில் தடை விதித்தது. இது குறித்து, சீன வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர் கவோ பெங் கூறுகையில், ”பாதுகாப்பு காரணங்களுக்காக, சீனாவை சேர்ந்த, 54 மொபைல் போன் செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது கவலை அளிக்கிறது.
”சீனா உட்பட அனைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், வெளிப்படையாகவும், நியாயமாகவும், பாரபட்சமின்றியும் இந்திய அரசு நடத்தும் என நம்புகிறோம்,” என்றார்.
பீஜிங்:சீனாவை சேர்ந்த, 54 ‘மொபைல் போன்’ செயலிகளுக்கு, இந்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து, சீனா கவலை தெரிவித்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.