யூடியூப் (youtube)தளத்தில் பணம் சம்பாதிப்பது மிக எளிதான விஷயமா? என்றால் நிச்சயம் இல்லை. எனினும் அதற்கு யூடியூபர்கள் கையாளும் விதம் தான் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆக யூடிபில் பணம் சம்பாதிப்பது கஷ்டமான விஷயம் அல்ல, ஆனால் எளிதான விஷயமும் இல்லை என்கிறார் பிரபல யூடியூபர் ஒருவர்.
உங்கள் யூடியூப் மூலம் வருமானம் கிடைக்க வேண்டுமெனில் அதற்கென சில விதிமுறைகள் உண்டு.
ஒருசிலர் என்னதான் தரமான வீடியோக்களை பதிவிட்டாலும் மிக குறைவான பார்வையாளர்களை மட்டுமே கவர்கின்றது. ஆனால் ஒன்றுமே இல்லாத விஷயங்களை பதிவிட்டு லட்சக்கணக்கில் பார்வையாளார்களை ஈர்க்கும்.
வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!
குசும்புக்கார யூடியூபர்
அந்த வகையில் லண்டனை சேர்ந்த குசும்புக்கார யூடியூபர் ஒருவர் பதிவு செய்த வீடியோவானது, உலகம் முழுக்க வைரலாக பரவி வருகின்றது. அதற்கு அவர் பதிவிட்ட தலைப்பு அத்துணைபேரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது Became the world’s richest man for 7 minutes. உண்மையில் இந்த தலைப்பினை பார்த்ததும் பார்க்க தூண்டியது.
அதிக வியூ
அப்படி என்ன தான் இருக்கிறது அந்த வீடியோவில்? இந்த வீடியோ பதிவேற்றம் செய்த சில நிமிடங்களிலேயே பல ஆயிரம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சொல்லப்போனால் இந்த வீடியோ பதிவேற்றம் செய்த சில தினங்களில் 7,67,900 பேர் இந்த வீடியோவினை பார்த்துள்ளனர்.
7 நிமிடங்களுக்கு பணக்காரர் எப்படி?
அதெல்லாம் சரி அப்படி என்ன தான் இவர் கூறினார்? எப்படி 7 நிமிடங்களில் பணக்காரர் ஆனார்? வாருங்கள் பார்க்கலாம். லண்டனை சேர்ந்த குசும்புக்கார பிரபல யூடிபரான மேக்ஸ் ஃபோஷ், சர்வதேச அளவிலான பில்லியனர் ஆன எலான் மஸ்கினை தாண்டி மிகப்பெரிய பணக்காரர் என்று கூறியுள்ளார். அதுவும் 7 நிமிடங்களுக்கு பணக்காரராக நீடித்ததாகவும் கூறியுள்ளார்.
அன்லிமிடெட் மணி லிமிடெட்
அவரது வீடியோவில் யூடியூபரான இவர் பார்வையாளர்களை கவர அவரது வீடியோவில் ஒரு நிறுவனத்தினை திட்டமிடுகின்றார். இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தினை நிறுவுவது எளிதானது. இதற்காக நீங்கள் ஒரு ஃபார்மினை நிரப்ப வேண்டும். எனினும் அவருக்கு ஒரு பெயர் அந்த சமயத்தில் தேவைப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்தின் பெயர் Ltd என்று முடிய வேண்டும் என்ற நிலையில் தான், அன்லிமிடெட் மணி லிமிடெட் என்று கற்பனையாக பெயரையும் சூட்டியுள்ளார்.
கற்பனை நிறுவனம் என்ன செய்கிறது?
இந்த கற்பனை நிறுவனம் என்ன செய்கிறது என்ன செய்ய போகிறது என்ற கேள்விக்கு நூடுல்ஸ், மக்ரோனி மற்றும் கூஸ்கஸ், ஃபாரினேசியஸ் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களை தயாரிப்பதாகவும் தேர்தெடுத்துள்ளார். ஆனால் farinaceous என்றால் என்ன என தெரியவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் நிறுவனம் அதனைத் தான் செய்கிறது.
எப்படி 500 பில்லியன்?
நிறுவனத்தினை உருவாக்கி 10 பில்லியன் பங்குகளை 50 பவுண்ட் மதிப்பில் விற்றால் அதன் மூலம் தனது நிறுவனத்தின் மதிப்பு 500 பில்லியன் பவுண்ட் நிறுவனமாக மாறும். அதோடு எனது நெருங்கிய போட்டியாளரான எலான் மஸ்கினை விட என்னை பணக்காரர் ஆக்குங்கள். எனது நிறுவனத்தின் பெயர் அன்லிமிடெட் மணி லிமிடெட் என்றும் அறிவிக்கிறார்.
7 நிமித்தில் பணக்காரர்
இதற்காக லண்டன் நகரத்தில் முதலீட்டு வாய்ப்பு என பலரையும் அழைக்கிறார். இதற்காக ஒரு ஒப்பந்ததினையும் முதலீட்டாளார் ஒருவரிடம் போடுவது போலவும், அதனை மதிப்பீட்டு ஆலோசகருக்கும் அனுப்புகிறார். இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரது நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்[போது உலகின் பணக்காரர் ஆகியிருக்கிறார். இது எல்லாமே வெறும் 7 நிமிட வீடியோவில்.
நிறுவனம் கலைக்கப்படணும்
எனினும் அதன் பிறகு உங்களது நிறுவனத்தில் வருவாய் நடவடிக்கை இல்லை. நீங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆக உங்களது அன்லிமிடெட் மணி லிமிடெட் நிறுவனம் கலைக்கப்பட வேண்டும் என்ற கடிதம் வருகின்றது. ஆக மேக் வெறும் 7 நிமிடத்தில் உலகின் பணக்காரராக இருந்தது இப்படித் தான்.
லட்சம் பேரை ஈர்த்த வீடியோ
இந்த வீடியோவில் கூறியது போல அவர் 7 நிமிடத்தில் பில்லியனர் ஆகவில்லை என்றாலும், இந்த 7 நிமிட வீடியோ இன்னும் பல லட்சம் பேரை கவர்ந்துள்ளது. இதன் மூலம் அவரின் வருமானம் பெருகி இருக்கும். அவரின் குசும்புத்தனமானது பார்ப்போரை ரசிக்க வைக்கும் விதமாகவே உள்ள நிலையில், பலரும் பாசிட்டிவான கமாண்டினை பதிவு செய்து வருகின்றனர். அவரின் சேனலுக்கு சப்ஸ்கிரைப்பர்களும் பெருகிக் கொண்டே தான் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 645K சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளனர். அவரின் வருமானமும் நிச்சயம் பெருகி இருக்கும்.
how a YouTube prankster became worlds richest man for 7 mins
how a youtube prankster became worlds richest man for 7 mins/7 நிமிடத்தில் பணக்காரன் ஆனது எப்படி.. பிரபல யூடியூபரின் குசும்புத்தனத்தை பாருங்க.. !