தங்கம் விலையானது சர்வதேச அளவில் நிலவி வரும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில், விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
குறிப்பாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 1900 டாலர்களையும் தொட்டுள்ளது. கடந்த அமர்விலேயே 1900 டாலர்களை உடைத்த தங்கம் விலையானது, முடிவிலும் 1902 டாலர்களாக முடிவுற்றுள்ளது.
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இன்று தொடக்கத்திலும் தங்கம் விலையானது 1902.60 டாலர்களாக அவுன்ஸூக்கு தொடங்கியுள்ளது. ஆக தற்போது தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. இன்று சற்றே ஆறுதல்.. ஆபரண தங்கம் நிலவரம் என்ன?
8 மாத உச்சத்தில் தங்கம்
குறிப்பாக தங்கத்தில் 1923 டாலர்களை உடைத்தால் அடுத்த மீடியம் டெர்ம் இலக்கு 1970 டாலர்களாகவும் உள்ளது. ஆக இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதே இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது 8 மாத உச்சத்தில் காணப்படுகின்றது.
பாதுகாப்பு புகலிடம்
உக்ரைன் ரஷ்யா பதற்றமானது தற்போது வரையிலும் தணிந்த பாடாக இல்லை. அமெரிக்கா ரஷ்யா பின் வாங்கியுள்ளதாக அறிவித்திருந்தாலும், உக்ரைன் மீது எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம். இன்னும் முழுமையாக ரஷ்ய படைகள் வெளியேறவில்லை. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
பணவீக்கம்
மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, அமெரிக்காவில் தொடர்ந்து பணவீக்கமும் உச்சம் தொட்டு வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா – உக்ரைன் பதற்ற நிலைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் சப்ளையானது மேலும் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேற்கொண்டு பணவீக்கம் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கமானது பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைகளும் சரிவு
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கத்தின் விலையினை ஊக்குவிக்க காரணமாக அமையலாம். ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
gold prices trade nearly in 8 month high, should investors buy or sell?
gold prices trade nearly in 8 month high, should investors buy or sell?/8 மாத உச்சத்தில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா வேண்டாமா?