அபுதாபி: 8500 ஆண்டுகள் பழமையான வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புராதனமான வீடுகளின் அறைகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (United Arab Emirates) இந்த புராதன வீடுகள் கண்டறியப்பட்டன. இந்த வீடு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான வீடு என்றும், இது 8500 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்நாட்டின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை வியாழக்கிழமை (2022, பிப்ரவரி 17) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கல் சுவர்கள்
ஐக்கிய அரசு அமீரகத்தின் தொல்லியல்த்துறையால் மேற்கொள்ளபப்ட்ட ஆய்வுகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் அபுதாபி நகரின் மேற்கே காகா தீவில் அமைந்துள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட கட்டமைப்புகள் “எளிய சுற்று அறைகள்” என்று கல் சுவர்கள் என்றும் அவை ஒரு மீட்டர் (3.3 அடி) உயரத்திற்கு பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The discoveries on Ghagha Island compel a new understanding of our history and reinforce the deep cultural connections between the people of the UAE and the sea.
To learn more, visit: https://t.co/3TrKmP94mw
#InAbuDhabi pic.twitter.com/XtR0DMA5WN
— Department of Culture and Tourism – Abu Dhabi (@dctabudhabi) February 17, 2022
இந்த கட்டமைப்புகள் “தீவில் ஒரு சிறிய சமூகம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கொண்ட வீடுகள்” என்று தொல்லியல் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தொல்பொருள் பொக்கிஷமான எகிப்து வெளிப்படுத்தும் தொல்லியல் உண்மை
காகா தீவின் கண்டுபிடிப்புகள் நமது வரலாற்றைப் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்துகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுக்கும் கடலுக்கும் இடையே உள்ள ஆழமான கலாச்சார தொடர்புகளை வலுவாக எடுத்துரைக்கின்றன என்று அபுதாபி தொல்லியல் துறையின் அதிகார்பூர்வ டிவிட்டர் பக்கம் தெரிவிக்கிறது.
Our archaeologists have discovered evidence of the earliest known buildings in the UAE and wider region, on the island of Ghagha, west of Abu Dhabi city. Dating back more than 8,500 years, the stone-built structure reveal a compelling and even more ancient history of the nation. pic.twitter.com/VIuKJNYUtK
— Department of Culture and Tourism – Abu Dhabi (@dctabudhabi) February 17, 2022
கடலின் வளமான வளங்களைப் பயன்படுத்துதல்
நீண்ட தூர கடல் வர்த்தக வழிகள் உருவாகும் முன் கற்கால குடியேற்றங்கள் இருந்ததை இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது என்று குழு கூறியது. அத்துடன், நூற்றுக்கணக்கான தொல்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய நன்றாக வேலை செய்த கல் அம்புகள்” கிடைத்துள்ளன. “அன்றைய மக்கள் கடலின் வளமான வளங்களையும் பயன்படுத்தியிருக்கலாம்” என்றும் தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தொல்லியல் குழு தெரிவித்துள்ளது.
“காகா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு, புதுமை, நிலைத்தன்மை மற்றும் தொன்மையான மரபு ஆகியவற்றை உணர்த்துகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிராந்தியத்தில் வசிப்பவர்களின் டிஎன்ஏவில் ஒரு பகுதியாக புத்தாக்கம் இருந்ததைக் காட்டுகிறது” என்று துறைத் தலைவர் முகமது அல் முபாரக் கூறினார்.
மேலும் படிக்க | செங்கம் அருகே இரும்பை உருக்கும் பழமையான உளைக்களம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பழமையான கட்டிடங்கள் அபுதாபியின் கடற்கரையில் உள்ள மராவா தீவில் கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு உலகின் பழமையான முத்து 2017 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
அபுதாபி தீவுகளில் “வளமான கடற்கரைகள்” இருந்தடு கண்டறியப்பட்டதாக தொல்லியல் குழு கூறியது.
“உள்ளூர் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள்” மூலம் தீவுகளில் மக்கள் குடியேறியிருந்ததை புரிந்துக் கொள்ள முடிவதாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | அணைக்கட்டு மீது தனியாக நடக்கும் குழந்தை – பதைபதைக்க வைக்கும் வீடியோ