அரசு ஊழியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு – அரசு இப்படியொரு வார்னிங்!

ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில், தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மத்திய அரசும் டிஜிட்டல் இந்தியா போன்ற முன்னெடுப்பை எடுத்துள்ளது. தற்போது எங்கு பார்த்தும் டிஜிட்டல் அம்சம் உள்ளது. இன்றைய நவீன காலக் கட்டத்தில் ஸ்மார்ட் போன் இன்றியமையாததாக உள்ளது. ஸ்மார்ட் போனுக்குள்ளே உலகமே அடங்கி போய் விட்டது என்று சொல்லும் அளவுக்கு டெக்னாலஜி உள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செயலிகள் வாயிலாக, நாம் தினமும் புகைப்படங்கள், வீடியோக்கள், முக்கிய கோப்புகள் என பலவற்றை பகிர்ந்து வருகிறோம். எனினும் ஒருசில தனியார் நிறுவனங்களின் ஆப்கள் (செயலி) மூலம் தனிநபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனால் தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. மேலும் அது போன்ற செயலிகளை உபயோகிக்கும் போது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை
வாட்ஸ் அப்
,
டெலிகிராம்
போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது போன்ற செயலிகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால், தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலக்ஸா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.