இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,270 பேருக்கு கொரோனா; மேலும் 325 பேர் உயிரிழப்பு.! ஒரே நாளில் 60,298 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,270 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 325 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,06,155 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 25,920 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 22,270 ஆக குறைந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 3,650 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,28,06,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 492 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 325 ஆக குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 5,11,230 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 60,298 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,20,37,536 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 2,92,092 ஆக இருந்த நிலையில், தற்போது 2,53,739 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,75,03,86,834 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,28,578 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.