
இருளர் வாழ்வியலை சொல்லும் 'இருளி'
கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் படம் போலீஸ் லாக்அப்பில் கொல்லப்பட்ட ஒரு இருளர் இன இளைஞரைப் பற்றிய படமமா இருந்தது. இதனை சூர்யா தயாரித்து நடித்திருந்தார். பல விருதுகளையும் படம் பெற்றது. தற்போது இருளி என்ற படம் தயாராகி வருகிறது. இது ஒரு காதல் பின்னணியில் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது.
இந்த படத்தில் பாடகர் செந்தில் கணேஷ் நடிக்கிறார். அவருடன் டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். மதன் கேப்ரியல் இப்படத்தை இயக்குகிறார். பி.பி.பாலாஜி இசை அமைக்கிறார். வரன் ஒளிப்பதிவு செய்கிறார்.