உக்ரைன் எல்லையில் அணு ஆயுத போர் பயிற்சியில் ரஷ்யா.. அதிகரிக்கும் பதற்றம்..


உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தலைமையில் ரஷ்யா அணு ஆயுத பயிற்சியை மேற்கொண்டுவருகிறது.

உக்ரைன் – ரஷ்யா எல்லையில் லட்சக்கணக்கான போர் வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், போர் மூளும் பபாயம் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன.

உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது.

தற்போது நாட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது.

இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில், உக்ரைன் எல்லைகளில் படைகளை ரஷ்யா குவித்தது வருகிறது.

பதற்றம் அதிகரித்ததால், உக்ரைனும் படையைக் குவித்தது.

Russian Defence Ministry/Handout via REUTERS

இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இரு நாட்டுப்படைகளும் எல்லையில் குறைந்த அளவு படைகளைத் திரும்பப்பெற்றது. இந்நிலையில், மீண்டும் இரு நாட்டுப் படைகளும் எல்லையில் இராணுவ படைகளை குவித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கியது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இதனால் ஐரோப்பாவுக்கு பாதிப்பு என்று அமெரிக்கா தெரிவித்த நிலையில், சமீபத்தில் குறைந்த அளவிலான படைகளை ரஷ்யா திரும்பப் பெற்றதாக அறிவித்தது.

ஆனால், ரஷ்யா முன்பு இருந்ததை விட அதிகமான படைகளை உக்ரைன் கிரிமியா பகுதிகளில் குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PC: Maxar Technologies/Handout via REUTERS

இந்நிலையில், ரஷ்யா தனது அணு ஆயுத பலத்தை காட்டும் வகையில் இன்று பிரமாண்ட போர் பயிற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.

இந்த பயிற்சியில் அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிவிரைவு ஏவுகணைகள், நவீன போர் ஆயுதங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இப்பயிற்சியை அண்டை நாடான பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் ரஷ்ய அதிபர் புடின் திரைகளில் கவனித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Photo: Alexey Nikolsky/Sputnik via AFP

இதுதவிர, கடந்த 2014-ல் உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய கிரிமியன் பகுதியிலும், கருங்கடலிலும் ரஷ்ய போர் கப்பல்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளன. போர் சூழலுக்கு மத்தியில் இதுபோன்ற அணு ஆயுத பயிற்சியை ரஷ்யா நடத்துவது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. 

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.