உக்ரைன் மீது ரஷ்யா நிச்சயமாகப் படையெடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ரஷ்யா உக்ரைன் இடையிலான மோதல் நிலவரம் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதின் முடிவெடுத்து விட்டதாகக் கூறினார்.
கடந்த மாதம் புதின் தமது மனதுக்குள் என்ன நினைக்கிறார் என்றே புரியவில்லை என்று ஜோ பைடன் கூறியிருந்தார்.ரஷ்யாவின் உயர் அதிகாரிகளுக்கும் புதின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்று புரியாமல் குழப்பம் நீடிப்பதாக அவர் தெரிவித்த நிலையில் இப்போது, புதின் போருக்குத் தயாராகி விட்டதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.
வரும் நாட்களில் உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் தொடுக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த ஒரு காரணத்தையும் ரஷ்யா கூறினாலும் அது குறித்து அமெரிக்கா தீவிரமாக தலையிட்டு போரைத் தவிர்க்க முயற்சிப்பதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்க உறுதியுடன் இருப்பதாகவும் போர் விளைவுகளுக்கு காரணமாகும் ரஷ்யாவை தண்டிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜோ பைடன் தமது பேச்சில் குறிப்பிட்டார்.