Tamilnadu Local Body Election : தமிழகம் முழுவதும் நாள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மற்றும் தங்களது பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எளிமையாக தெரிந்துகொள்ள தமிழக தேர்தல் ஆணையம் வசதி செய்துள்ளது.
வார்டு விவரங்களைக் கண்டறிதல்
http://election.chennaicorporation.gov.in/gcculb22/ என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். அதில்
‘உங்கள் மண்டலம் மற்றும் பிரிவை அறிந்து கொள்ளுங்கள்’ (Press ‘Know your zone and division’) என்பதை கிளிக் செய்யவும்
உங்கள் வாக்காளர் அடையாள EPIC எண்ணைத் டைப் செய்யவும்
அதில் உங்கள் மண்டலம், பிரிவு, வாக்குச் சாவடி முகவரி தோன்றும்
வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி எண்கள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும் https://tnsec.tn.nic.in/tnsec_upload/index_english.html
இதில் வலது பக்கத்தில் – தேர்தல் பாத்திரங்கள் 2022 என்பதை கிளிக் செய்யவும்
மாநகராட்சியின் பெயரை (சென்னை) கிளிக் செய்யவும், உங்கள் வார்டுக்கு கீழே ஸ்க்ரால் செய்யவும், பூத் முகவரியுடன் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைக் கண்றியலாம்.
வேட்பாளரின் பிரமாணப் பத்திரங்கள், தொடர்பு எண்களை அணுகுதல்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும் https://tnsec.tn.nic.in/tnsec_upload/index_english.html
‘நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 2022 – வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது – வேட்பாளர் பற்றிய சுருக்கத் தகவல்’ என்பதை கிளிக் செய்யவும்.
சென்னை மாநகராட்சியை கிளிக் செய்து, வார்டைத் தேர்ந்தெடுத்து, கட்சிக்கு மற்றும் வேட்பாளரின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
அதன்பிறகு நீங்கள் பிரமாண பத்திரங்களை பதிவிறக்கம் செய்து, தொடர்புகள், சொத்து விவரங்கள், கவுன்சிலரின் முகவரி பற்றிய தகவல்களை பெறலாம்.
தேர்தல் பார்வையாளர்களின் தொடர்புகளை அணுகுதல்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தைப் பார்வையிடவும்
தேர்தல் பார்வையாளர்களின் மொபைல் எண்களின் விவரங்களை கிளிக் செய்யவும்.
நடத்தை மாதிரி பற்றி தெரிந்து கொள்ள
மாநில தேர்தல் கமிஷன் இணையதளத்தில் ‘மாதிரி நடத்தை விதிகளை’( ‘Model Code of Conduct’ ) கிளிக் செய்யவும்
ஒதுக்கப்பட்ட வார்டுகள், பொது வார்டு விவரங்கள் மற்றும் வார்டு வரைபடங்கள் பற்றி அறிய
http://election.chennaicorporation.gov.in/gcculb22/ ஐப் பார்வையிடவும்
வார்டுகள், வார்டு வரைபடங்கள் அல்லது முன்பதிவு 2022 ஆகியவற்றின் வரையறையை என்பதை கிளிக் செய்து தகவல்ளை பெற்றுக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“