உதகை: உதகையில் வாக்குப்பதிவு மையத்தில் கரோனா கட்டுப்பாட்டிற்காக வழங்கப்பட்ட கையுறையினை தெருகளில் வாக்காளர்கள் வீச்சிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளிலும், 11 பேரூராட்சிகளில் உள்ள 291 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் கையுறைகள் வழங்கப்பட்டன. வாக்குப்பதிவு செய்த பின்னர் கையுறைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் வகையில் வாக்குப்பதிவு மையங்களிலேயே தனியாக தொட்டிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், உதகை நகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டுக்கான வாக்குச்சாவடி புனித பிரான்சிஸ் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வாக்குப்பதிவு செய்வதற்காக வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தவும் தொட்டிகளும் வகைப்பட்டு இருந்துள்ளது. இருப்பினும் வாக்காளர்கள் அனைவரும் கையுறைகளை தெருக்களில் வீசிச் சென்றுள்ளனர். இவைகள் காற்றி பரந்து அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக அகலாத நிலை மக்கள் அலட்சியமாக இருந்து அதிர்ச்சியை வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.