பிரபல மலையாள நடிகை
அஞ்சலி நாயர்
. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும் லீடிங் நடிகையாகவும் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி நாயர். பெண், புலிமுருகன், திரிஷ்யம்-2 ஆகிய படங்களில் அஞ்சலி நாயரின் நடிப்பு பேசப்பட்டது.
கையெடுத்து கும்பிட்டு அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்… தீயாய் பரவும் வீடியோ!
தமிழில், நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்துபோகும், நீ நான் நிழல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி நாயர் ஏற்கனவே அனீஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆவ்னி என்ற பெண் குழந்தை உள்ளது.
2 குழந்தைகளுக்கு அம்மான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க… பாவாடை தாவணியில் நடிகை ஸ்னேகா!
பின்னர் அனுஷ் உடன் அஞ்சலி நாயருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இதையடுத்து மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும்
அஜித் ராஜு
என்பவருடன் அஞ்சலி நாயர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல் பரவியது.
பிக்பாஸ் ஜூலியா இது… தீயாய் வேலை செய்யும் அட்மின்!
இந்நிலையில் அஞ்சலி நாயர் அஜித் ராஜுவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தான் அஜித் ராஜுவை திருமணம் செய்து கொண்ட தகவலை அஞ்சலி நாயர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள அஞ்சலி நாயர் திருமண போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வாழ்க்கைக்கு உகந்த படம் கடைசி விவசாயி; பாராட்டிய மிஷ்கின்