லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) மெகா ஐபிஓ-வை மார்ச் மாதம் வெளியிட உள்ள நிலையில், இதை எதிர்க்கும் வகையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (AIIEA) ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!
AIIEA அமைப்பு
இந்நிலையில் AIIEA அமைப்பு மார்ச் 28-29 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தையும் அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ-வா எல்ஐசி மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது என்பது “தனியார்மயமாக்கலுக்கான முதல் படி” என்றும் “பாலிசிதாரர்களின் நலன்களுடன் அரசு சமரசம் செய்துள்ளது” என்று இந்த அமைப்புக் கருதுகிறது.
எல்ஐசி ஊழியர்கள் சங்கம்
எல்ஐசி ஊழியர்கள் சங்கமும் தற்போது ஏஐஐஇஏ அமைப்புக்கு ஆதரவாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எல்ஐசி ஊழியர்கள் சங்கம் ஐபிஓ தொடங்கும் நாளில் 1.25 லட்சம் இன்சூரன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு
எல்ஐசி ஐபிஓ வெளியீட்டு நாளில் எல்ஐசி ஊழியர்கள் அமைப்புடன் 10 மத்திய தொழிற்சங்கங்களும் மத்திய அரசின் புதிய தொழிலாளர் கொள்கை மற்றும் அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டத்தில் சேர உள்ளது என AIIEA அமைப்பின் துணைத் தலைவர் ஏகே பட்நாகர் தெரிவித்தார்.
ஐபிஓ-வுக்குப் பின்
எல்ஐசி-யின் ஐபிஓவுக்குப் பிறகு, எல்ஐசி நிறுவனமும் மற்ற தனியார் நிறுவனங்களைப் போல நடந்துகொள்ளலாம் என்றும், நாட்டில் பாலிசிகள் மற்றும் பாலிதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தாமல் அதிகப் ப்ரீமியங்களை வசூலிப்பதில் கவனத்தைச் செலுத்தலாம் என்றும் பட்நாகர் கூறுகிறார். இதன் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
க்ரீமி லேயரை மட்டும் இலக்காகக் கொண்டு இயங்கும் தனியார் இன்சூரன்ஸ் துறையில் சராசரி ப்ரீமியம் அளவு 50,000 ரூபாயாக இருக்கும் நிலையில் எல்ஐசியின் சராசரி பிரீமியம் அளவு ரூ 11,000 ஆக மட்டுமே உள்ளது. எல்ஐசி ஐபிஓ-வுக்குப் பின் இது கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் பட்நாகர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு
எல்ஐசியில் தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சம் ஊழியர்களும், 13 லட்சம் முகவர்களும் உள்ளனர். இது ஜவஹர்லால் நேரு அரசாங்கத்தால் 1956 இல் ஆயுள் காப்பீட்டு வணிகத்தை தேசியமயமாக்கி 245 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களைக் கைப்பற்றி உருவாக்கப்பட்டது.
எல்ஐசி
எல்ஐசி உருவாக்கப்பட்ட பின்னர் மத்திய அரசு மக்களுக்குப் பாலிசிகள் மூலம் பாதுகாப்பை வழங்குவதை மையமாகக் கொண்டு அவர்களின் சிறு சேமிப்பை நீண்ட கால முதலீட்டிற்கான மூலதனமாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
LIC employees to strike on March 28-29 against the IPO
LIC employees to strike on March 28-29 against the IPOஎல்ஐசி ஐபிஓ-வுக்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக்..!