இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர்
இளையராஜா
. இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தனித்துவமான இசையால் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.
கல்யாணத்துக்கு ரெடியாயிட்டாங்க போல… கன்னக்குழி நடிகையின் கலக்கல் போட்டோஸ்!
எத்தனை இளம் இசையமைப்பாளர்கள் ட்ரென்டியாக இசையமைத்தாலும் இளையராஜாவின் இசைக்கான வரவேற்பு என்றுமே குறைந்ததில்லை. இந்நிலையில் 13 ஆண்டுகளாக தனது தம்பியான இயக்குநர் கங்கை அமரனிடம் பேசாமல் இருந்த இளையராஜா, கடந்த வாரம் அவரை அழைத்து பேசினார்.
கையெடுத்து கும்பிட்டு அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்… தீயாய் பரவும் வீடியோ!
இருவரும் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானது. இருவரின் சந்திப்பையும் குடும்பத்தினர் கொண்டாடினர். 13 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனே அழைத்து பேசியதால் ஹேப்பியான
கங்கை அமரன்
, இனிமேல் அண்ணன் சொல்வதுதான் எல்லாமே என்று கூறியுள்ளார்.
அரபிக் குத்து பாட்டு காப்பியா? ஆதாரத்துடன் கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்!
இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளது குறித்து இயக்குநர்
தங்கர் பச்சான்
தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ஒரே வயிற்றில் பிறந்து,ஒன்றாகவே வளர்ந்து,இன்ப துன்பங்களை அனுபவித்து,காலம் ஏற்படுத்திய பிரிவில் கடந்த காலங்களை எண்ணி எண்ணி ஏக்கங்களோடு தனிமையில் தத்தளித்து ஒன்று சேர்ந்தப்பின் அங்கே சொற்களுக்கு இடமேது!! இதனைக்கண்டு எனைப்போன்ற இலட்சக்கணக்கிலான அண்ணன் தம்பிகளும் நெகிழ்கின்றோம்!! என தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைக்கு உகந்த படம் கடைசி விவசாயி; பாராட்டிய மிஷ்கின்