கடுமையான புயல் காற்றுக்கு மத்தியில் தள்ளாடியபடி தரையிறங்கிய விமானம்: பிரித்தானியாவில் நடந்த பரபரப்பு சம்பவம்


பிரித்தானியாவில் யூனிஸ் புயல் தாக்குதலின் நடுவே ஹீத்ரோ விமான நிலையத்தில் பல தள்ளாட்டங்களுக்கு மத்தியில் விமானம் ஒன்று பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் யூனிஸ் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் மற்றும் Met வானிலை நிலையம் அறிவுறுத்திருந்தது.

இந்தநிலையில் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் கடுமையான புயல் காற்றுக்கு மத்தியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க வந்தது.

எதிர்பாராத விதமாக காற்று பலமாக வீசியதால் விமானம் காற்றில் அலைக்கழிக்கப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இருப்பினும் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு பல தள்ளாட்டங்களுக்கு மத்தியிலும் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

இதுகுறித்து ஹீத்ரோ விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், விமான நிறுவனம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் பணியாளர்களின் நெருங்கிய ஒத்துழைப்போடு, பயணிகளை அவர்களின் பயணங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நாங்கள் பணியாற்றி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்த யூனிஸ் புயல் தாக்குதலால் போக்குவரத்து நெட்வொர்க்குகளில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து விமானம் தரையிறங்கும் நிகழ்வை BIG JET TV என்ற யூடியூப் தளம் நேரலையில் ஒளிபரப்பியது.

ஆச்சரியத்தக்க நிகழ்வு என்னவென்று இந்த நேரலை ஒளிபரப்பை சுமார் 1,90,000 நபர்கள் ஒரே நேரத்தில் பார்த்துள்ளனர்.

மேலும் இந்த ஒளிபரப்பின் மூலம் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.