கனடாவில் உயர்கல்வி படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், கட்டணம் செலுத்தும் முன், தாங்கள் சேர உள்ள கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் உள்ளிட்டவற்றை முழுமையாகச் சரிபார்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள 3 கல்லூரிகள், கொரோனா தொற்று காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது.
இதனால், அங்கு பயின்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் இந்திய தூதரகத்தை அணுகினர்.
இந்நிலையில், கனடா அரசுடனுடம், கியூபெக் மாகாண நிர்வாகத்துடன் இது குறித்து பேசி வருவதாக குறிப்பிட்ட இந்திய தூதரகம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதியளித்தது.
மேலும், சம்மந்தப்பட்ட கல்லூரிகளை மாணவர்கள் தொடர்பு கொண்டு கட்டணத்தை திரும்பப்பெற கியூபெக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.