இந்திய மக்கள் பண்டிகை காலத்திற்குப் பின்பு தொடர்ந்து செலவுகளைக் குறைத்து வருகின்றனர் குறிப்பாகக் கிரெடிட் கார்டு மூலம் மக்கள் செலவு செய்யும் அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.
குறிப்பாகக் கொரோனா தொற்றுக் காரணமாகக் கட்டுப்பாடுகள் அதிகளவில் குறைத்துள்ள வேளையில் மக்கள் கிரெடிட் கார்டை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது.
இந்திய பணக்காரர்கள்: கார், பங்களா, பிரைவேட் ஜெட் இருந்தும்.. மகிழ்ச்சியாக இல்லை..!
கிரெடிட் கார்டு
2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யப்பட்டு மாதாந்திர அளவீடுகள் சராசரியாக 84,000 கோடி ரூபாய் முதல் 88,000 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது டிசம்பர் காலாண்டில் சராசரியாக மாதம் 94,700 கோடி ரூபாயாக இருந்தது என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
6 மாத அளவீடு
இதேவேளையில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யப்பட்ட சராசரி அளவை விடவும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் அதிகமாகவே உள்ளது. மேலும் 2022ஆம் நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யப்படும் தொகையின் மாதாந்திர சராசரி அளவு 76,700 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு
மேலும் டிசம்பர் 2021ல் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் செலவு செய்யப்படும் அளவு 1.39 மடங்கு அதிகமாக உள்ளது. இது ஏப்ரல் 2019 அளவீட்டை விடவும் அதிகமாகும். மேலும் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யப்படும் மொத்த தொகையில் 25.1 சதவீதத்தை ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து எஸ்பிஐ கார்ட்ஸ் வாடிக்கையாளர்கள் 19.8 சதவீதம் செலவு செய்கின்றனர்.
பண்டிகை காலம்
2022ஆம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி மாத அளவுகளைப் பார்க்கும் போது பண்டிகை காலத்திற்குப் பின்பு கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த நிலையிலும் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் அளவீடு மக்கள் மத்தியில் குறைந்துள்ளது.
Credit card spending falls after festive season
Credit card spends falls after festive season கிரெடிட் கார்டு பயன்பாட்டைக் குறைத்த மக்கள்.. பிப்ரவரி மாதம் சரிவு..!