குற்றாலம்: பெண் இன்ஸ்பெக்டர்- திமுக மா.செ வாக்குவாதம் வீடியோ

Thenkasi DMK Dist Secretary debate with female inspector video: திமுக பூத் ஏஜெண்ட்களை வாக்குசாவடி அருகே உட்காரவிடவில்லை என பெண் இன்ஸ்பெக்டரிடம் திமுக மாவட்ட செயலாளர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், திமுக மாவட்ட செயலாளர் ஒருவர், தங்களது பூத் ஏஜெண்ட்களை வாக்கு சாவடி அருகே உட்கார அனுமதிக்கவில்லை என கூறி பெண் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், தென்காசி திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன், பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம், தங்கள் கட்சியின் பூத் ஏஜெண்ட்களை ஏன் வாக்குச்சாவடி அருகே உட்காரவிடவில்லை என கேட்கிறார்.

இதையும் படியுங்கள்: கோவையில் பரிசுப் பொருள் வழங்க மண்டபத்தில் குவிந்த தி.மு.க-வினர்: வானதி சீனிவாசன் புகார்

உடனே இதனை வீடியோ எடுக்கும்படி அந்த பெண் இன்ஸ்பெக்டர், அருகில் உள்ள காவலரிடம் கூறுகிறார். மேலும், இவ்வளவு நேரம் அவர்கள் இங்கு தான் உட்கார்ந்து இருந்தார்கள் என்றும் கூறுகிறார்.

அதற்கு மாவட்ட செயலாளர், அவங்க ஆட்கள் உட்கார்ந்து இருக்காங்க, எங்க ஆட்களை உட்காரவிடல என கேட்கிறார். உடனே பெண் இன்ஸ்பெக்டர், உங்களிடம் யார் சொன்னது, இங்க உட்காரவிடவில்லைனு என கேட்க, எங்க ஆளுங்க சொன்னாங்க நான் கேக்குறேன், ரொம்ப பேசாதீங்க என மாவட்ட செயலாளர் சொல்கிறார்.

பின்னர் மற்றொரு காவலரிடம், எங்க ஆளுங்கள உட்கார கூடாதுனு சொன்ன எப்படி? என கேள்வி எழுப்பிய திமுக மா.செ, அந்த இன்ஸ்பெக்டர் அம்மா எங்க வேலை பாக்குறாங்க என கேட்கிறார். பின்னர், அந்த காவலர் மாவட்ட செயலாளரை சமாதானப்படுத்துகிறார். இவ்வாறு அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.