புதுச்சேரி : கொரோனா தொற்றால் போலீஸ் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு, 21, 22ம் தேதிகளில் உடற்தகுதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள், ரேடியோ டெக்னிஷியன்-12, டெக் ஹேண்ட்லர்-29 பணியிடங்கள் நிரப்புவதிற்கான உடற்தகுதி தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி துவங்கி நடந்தது.கான்ஸ்டபிள் பணி உடற்தகுதி தேர்வில் ஆண்கள் 1,844 பேர், பெண்கள் 478 பேர் தேர்வாகி உள்ளனர். டெக் ஹேண்ட்லர் பணிக்கு நடந்த நீச்சல் தேர்வில் 220 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டபோது,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் பங்கேற்க முடியவில்லை. அத்தகைய நபர்கள் மற்றும் உடலில் காயம் ஏற்படுதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணத்தால் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க முடியாத 597 பேருக்கு, வரும் 21 மற்றும் 22ம் தேதி உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கும், உடற்தகுதி தேர்வில் பங்கேற்போர் குறித்த தேதி வாரியான அட்டவணை https://police.py.gov.in என்றபோலீஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உடற்தகுதி தேர்வு காலை 6:00 மணிக்கு துவங்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
Advertisement