ஸ்மார்ட்போன், கேட்ஜெட்ஸ் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஒப்போ நிறுவனம், புதிதாக டேப்லெட் தயாரிப்பில் இறங்கியுள்ளது. டேப்லெட் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சாம்சங், மோட்டோ, ஆப்பிள், நிறுவனங்களுக்கும், தற்போது கால்பதித்திருக்கும் ரியல்மி நிறுவனத்திற்கும் ஒப்போ கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ‘ஒப்போ ஃபைண்ட் என்’ (Oppo Find N) ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்ட ஒப்போ நிறுவனம், புதிய டேப் தயாரிப்பு வேலைகளை சைலண்டாக செய்து வருகிறது ஒப்போ. சைலண்டாக வேலையை செய்தாலும், தனது புதிய தயாரிப்பு டெக் சந்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என ஒப்போ விரும்புகிறது.
50MP சோனி OIS கேமரா… வெளியானது Realme 9 Pro Plus 5G சூப்பர் கேமரா மொபைல்!
ஒப்போ டேப் சிறப்பம்சங்கள்
மடிக்கணினியை விட கொஞ்சம் சின்னதாக, 11” அங்குல எல்சிடி திரை கொண்டு இந்த டேப் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. 2560*1600 பிக்சல்கள் தெளிவு திறன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட் உடன் இந்த திரை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், போட்டியாளர்களை விட குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், ஸ்னாப்டிராகன் 870 புராசஸர் கொண்டு இந்த டேப்லெட்டுக்கு திறனுட்டப்பட்டுள்ளது மிக முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக திறன்வாய்ந்த சிப்செட்டுகளைக்
கொண்ட டேப்லெட்டுகள் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இணையவழி கல்விக்காக என விற்கப்படும் குறைந்த விலை டேப்லெட்டுகளின் திறன் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது. அந்தவகையில் ‘
ஒப்போ பேட்
’ டேப்லெட்டை நிறுவனம் சிறப்பாக கட்டமைத்துள்ளது.
Metaverse’ல் நிலம் வாங்கி தியேட்டர் கட்டிய தயாரிப்பாளர்!
ஒப்போ பேட் பேட்டரி
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Colour OS 12 ஸ்கின் மூலம் இந்த டேப்லெட் இயக்கப்படுகிறது. 6ஜிபி ரேமுடன், 128ஜிபி உள்ளடக்க மெமரி உடன் இந்த டேப்லெட் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி பேக்கப்பை பொருத்தவரையில், Oppo Pad 8080mAh திறனுள்ள பேட்டரியைக் கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படுகிறது.
இதனுடன்
Oppo Enco X2
இயர்பட்ஸ்,
Oppo Watch 2
ஸ்மார்ட் வாட்ச் ஆகியவையும் வெளியாக உள்ளது. இதில் என்கோ எக்ஸ்2 இயர்பட்ஸின் LHDC 4.0 கோடெக் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் தலைமுறை Coaxial dual-unit ஸ்பிக்கர்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு நேர்த்தியான இசை விருந்தை அளிக்கும் என நம்பலாம்.
Read More:
பிரபலங்களுடன் டேட்டிங் செய்ய ஒரு ஸ்பெஷல் ஆப்?Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?150Mbps broadband plans: 3.5TB வரை டேட்டா… OTT தளங்களின் சந்தாவும் இலவசம்!